நீரால் நிறைந்த இந்த உலகத்தில், விண்ணிலிருந்து வரும் நீர் பொய்த்தால் உள்ளிருந்து வாட்டும் பசி.
மு. வரதராசன் உரை:
"மழைபெய்யாமல் பொய்படுமானால்,கடல்சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்"
இன்றைய காலத்தில் அறிவியலின் வளர்ச்சி என்பது மிகவும் பெரியது இருப்பினும் பூமி எவ்வாறு உருவானது என கேட்டாள் சிலர் அறிவியல்ரீதியாகவும், சிலர் ஆன்மீகரீதியாகவும் பதில் கூறுவர் ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தனது குறளின் வாயிலாக பூமியானது வானவெளியில் தோன்றியது என அறிவியல் பார்வையை இவ்வுலகிற்க்கு காட்டினார்.
இக்குறளின் படி இவ்வுலகில் நான்கில் மூன்று பங்கு நீரால் நிறைந்திருந்தாலும் மழைநீர் மட்டுமே உணவிற்க்கு வழிவகுக்கிறது. மழை இல்லையெனில் கடல் முழுக்க நீர் இருந்தாலும் நமக்கு எந்த வித பயனும் கிடையாது.
அறிவியல் கணக்கெடுப்பின் படி கடந்த 100 ஆண்டுகளில் மழை சதவிகிதம் மிகவும் குறைந்திருக்கிறது. பருவ மழைகள் காலம் மாறியும் சில சமயங்களில் பெய்யாமலும் போய்விடுகிறது. இதனால் விவசாயமும், விவசாயிகளும் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள், இதனால் மக்கள் உணவில்லாமல் பெரும் பஞ்சத்திற்க்கு ஆளாக்கப்படுவர் என திருவள்ளுவர் கூறுகிறார். அவரது மற்ற குறள்களிலும் மழை, உழவு இவை இரண்டையும் இணைக்கும் அறிவியலை கூறுகிறார்.
திருமதி. சிநேகவல்லி நாராயணன்
Magizhchi Snegavalli